Saturday, February 23, 2008

குர்ஆனில் பேசும் எறும்புகள்







நபிசுலைமானிடம் பேசிய எறும்பு

حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِي النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ
27:16-19
இறுதியாக அவர்கள் (எறும்புகள் நிறைந்த) எறும்புப் புற்றின் அருகே வந்தபோது, 'எறும்புகளே! உங்கள் குடியிருப்புக்களுக்குள் நுழையுங்கள்! சுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக்கூடாது என்று ஓரு எறும்பு கூறியது. (அல்குர்ஆன்:27:18)

فَتَبَسَّمَ ضَاحِكًا مِّن قَوْلِهَا
அது சொல்வதைக் கேட்டு சுலைமான் புன்னகை சிந்தி சிரித்தார்
(அல்குர்ஆன்: 27:19)

என்று அருள்மறை கூறுகிறது.

எறும்பு பேசியது:-

அல்லாஹ்வின் அற்புத மறையாம் அல் குர்ஆன் 'எறும்புகள் பேசியதாகவும்,அது கேட்டு பறவைகள், உயிரினங்களின் மொழிகளைத் தெரிந்த இறைதூதர் சுலைமான்(அலை) அவர்கள் சிரித்ததாகவும்' இங்கே கூறப்படுகிறது.

அல்லாஹ் தனது படைப்புகளில் அற்பமான எறும்புகள்; பேசியதையும், அதற்கொரு முக்கியத்துவம் அளித்தும் தனது வேதத்திருமறை யில் குறிப்பிடுவதாயின் அந்த அரிய படைப்பில் நிச்சயம் பல அதிசயங்கள் அமைந்திருக்கும் என ஆய்வு செய்தபோது நமக்குத் தெரியாத பல உண்மைகள் தெரியவருகின்றன.

இப்போது நாம் அதுபற்றி விரிவாகக் காண்போம்.


எறும்பும் அதன் வகைகளும்எறும்பு ஒருகுழுவாக வாழும் ஒரு பூச்சியனமாகும். அது உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. அண்மையில் இதுபற்றி ஆய்வு செய்த அறிவியலார் 'உலகில் 11,880 வகையான எறும்பினங்கள் உள்ளதாகக் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்க விஞ்ஞானி ஒருவர், இவை 90,000 க்கும் மேலிருக்கும் எனக்கூறுகிறார்.இவற்றில் பெரும்பாலானவை வெப்பமுள்ள நாடுகளில் தான் வாழ்கின்;றன.

பாதை மாறாது திரும்பும் அதிசயம்





நாம் ஒரு பதிய ஊருக்கோ நாட்டிற்கோ செல்லும் போது பாதைகளையும் இடங்களையும் தெரிந்து கொள்ள வரைபடமோ,வழிகாட்டியோ தேவப்படுகிறது.அது போல இரை தேடச் செல்லும் உயிரினங்கள் பலமைல் தூரம் சென்று விட்டு தமது வசிப்பிடங் களுக்கு எப்படி திரும்பி வந்து சேருகின்றன என்பதை ஆராயும் போது நமக்கெல்லாம் வியப்பாக உள்ளன.ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஒவ்வொரு புதுமையான ஏற்பாட்டையும் அறிவையும் அதனுள் அதைப் படைத்த நாயன் அமைத்துள்ளான். இங்கே அவன், எறும்புக்கு என்ன ஏற்பாட்டைச் செய்துள்ளான் எனபதைப் பார்ப்போம்.

துனீசியா நாட்டின் மத்திய தரைக் கடல் பகுதியில் வாழும் ஒருவகை கறுப்பு இன எறும்புகள் (Black Aunts) பாலைவனத்தில் கூடுகள் அமைத்து வாழந்து வருகின்றன. காலையில் சூரியன் உதயமாகி சிறிது நேரத்திற்கெல்லாம் வெப்பநிலை எழுபது டிகிரி சென்டி கிரேடு வரை உயரும் அந்த வெப்பநிலையில் உள்ள பகல் வேளையில் தனக்குத் தேவையான இரையைத்தேடி வீட்டைவிட்டு வெளியேறுகிறது.

அடிக்கடி நின்றும் திரும்பியும் வேகமாக ஊர்ந்து செல்லும் எறும்பு தனது கூட்டிலிருந்து 200 மீட்டர் (655 அடி) பரப்பளவுக்கு வளைந்தும் நெளிந்தும் ஊர்ந்து வெகுதூரம் வரை சென்று விடுகின்;றன. பாதைகளை அறிவதற்கு அடையாளமாக அங்கே ஆறு,குளம்,குட்டை,ஏரி,மரம்,கட்டடம் என எதுவுமே இல்லை. அது தேடிய பருப்பொருட்களை சுமந்து கொண்டு என எந்தவகை அடையாளங்களும் இல்லாத பாலைவனத்தில் எப்படி துல்லியமாக தன் வசிப்பிடத்தைக் கண்டுபிடித்து வருகிறது என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.


எறும்புகளின் நீளம்,உயரம்,பருமன்,எடை இவைகளை கருத்தில் கொண்டு,அவைகள் பயணிக்கும் தூரத்தை கணக்கிட்டு மனித ஆற்றலோடு ஒப்பிடும்; போது அதே பாலைவனத்தில் 35 முதல் 40 கிலோ மீட்டர் தூரம் வரை ஒரு மனிதன் பயணிப்பதற்கு சமமாகும். மனிதனால் நடைமுறையில் சாத்தியமே இல்லாத இந்த அற்புதச் செயலை சாதாரண எறும்புகள் வெற்றிகரமாக செய்து முடிக்கின்றனவே! இது எப்படி ? என சிந்திதாலே தலை சுற்றுகிறது.


கண்களில் திசைகாட்டும் கருவி




அல்லாஹ் எறும்புகளுக்கு வழங்கியிருக்கும் தனிப்பட்ட உடலமைப்பே இந்த அரிய செயல்களுக்குக் காரணமாகும். எறும்புகளின் கண்களில் பிரத்தியேகமாக திசையை அறியக்கூடிய அற்புதமான ஒரு கருவியை இறைவன் பொருத்தியிருக்கிறான்.

அல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ள இந்த ஆற்றல் மனிதனால் கண்டு பிடிக்கப்பட்ட திசைகாட்டும் கருவியைவிட பன்மடங்கு ஆற்றல் வாய்ந்தது. இந்த சிறப்புமிகு அம்சத்தால் மனிதனால் உணரமுடியாத ஒருவகை கதிர்களை எறும்புகள் உணர்கின்றன. இந்த உணரும் கதிர்களால் வடக்கு,தெற்கு என திசைகளை சரியாக அறிந்து கொள்கின்றன. இவ்வாறு திசைகளை அறியும் எறும்புகள் தங்களது கூடுகளையும் தவறாமல் அடையாளம் கண்டு கொள்கின்றன. ஒளியின் குணநலன்களை மனிதன் அறிவதற்கு முன்னரே எறும்புகள் ஒளியைப்பற்றித் தெரிந்து கொண்டு அதனைப் பயன்படுத்திவருவது விந்தையிலும் விந்தையல்லவா? இது அல்லாஹ் வழங்கிய அற்புத ஆற்றல் அல்லவா?


நோய்கிருமிகளைத் தடுக்கும் ஆற்றல்


மனிதன் தன்னை நோய்கிருமிகளிலிருந்து தடுத்துக் கொள்வதைப்போல மற்றஉயிரினங்களும் தங்களை தற்காத்துக் கொள்ள சில தடுப்பு முறைகளைக் கையாளுகின்றன. அந்த வகையில் எறும்புகள் நோய்கிருமிகளை தடுக்க ஒரு வகை திராவகம் போன்ற திரவப் பொருளை உற்பத்திச் செய்கின்றன. இந்த திரவப் பொருளை தங்களின் உடலில் பரவச் செய்வதுடன் தங்களின் கூடுகளின் சுவர்களிலும் தடவுகின்றன. எறும்புகள் தங்களின் உடலை மட்டுமல்ல,தங்களது வசிப்பிடத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. இதனை ஆராயும் போது எப்படிப்பட்ட பாதுகாப்பு முறையை இந்த அற்பமான எறும்பினத்தில் அல்லாஹ் அமைத்திருக்கிறான் எனபதை எண்ணி அவன் வல்லமையை உணர்ந்து அவனுக்கு ஒவ்வொரு உயிரினமும் தஸ்பீஹ் செய்த வண்ணமுள்ளன என வான்மறை குர்ஆன் கூறுவதை மனிதர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


இது மட்டுமா? இன்னும் எத்தனையோ அதிசயங்கள் அவற்றில் உள்ளன.
ஏளனம் செய்தோர் வியந்து நிற்கின்றனர்.

'கடந்த காலங்களில் எறும்புகள் ஒன்றோடொன்று உரையாடிக்கொள்கின்றன.மிக நுட்பமான தகவல்களை பரிhறிக்கொளகின்றன'
என்று குர்ஆன் கூறியபோது எள்ளி நகையாடியோர் ஏராளம். 'இவையெல்லாம் கற்பனைகள்' என பரிகாசம் செய்தனர். ஆனால், அண்மையில் எறும்புகளைப் பற்றி வெளியட்டுள்ள ஆய்வுகள் மனிதனை வியக்கவைக்கின்றன.

விலங்குகள், பூச்சிகள்; ஆகியவற்றின் வாழ்க்கை முறைகளை (டுகைந ளுவலடந) ஆய்வு செய்தோர் 'எறும்புகளின் வாழ்கைப் போக்கு மனிதனின் வாழ்க்கை போக்கோடு (ர்ரஅயn டுகைந ளவலடந) மிகவும் நெருங்கிய தொடர்புடையவை எனக் கண்டுள்ளனர்.

அவை பின்வருமாறு :-

வியப்பூட்டும் வாழ்க்கை முறைகள்!


1. மனிதர்களைப் போன்றே எறும்புகள் இறந்த உடலகளை மண்ணில் புதைத்து விடுகின்றன.

2. தங்களின் அன்றாடப் பணிகளை மனிதர்களைப் போல் சீராக பங்கிட்டு நிர்வாகங்களை ஒரு திட்டமிட்டுக் கவனித்துக் கொள்கின்றன. மேலாளர்கள் (Managers), மேற்பார்வையாளர்கள் (Supervisors), தொழிலாளர்களை மேலாண்மை செயபவர்கள் ( Foremen),உழைப்பாளர்கள் (Workers) என்று தனித்தனியாக துறைகளை (Departments) வகுத்துச் செயலாற்றுகின்றன.

3. அவ்வப்போது ஒன்று கூடி தங்களிடையே அனைவரும் மகிழ்ச்சியோடு (Chatting) அளவளாவிக் கொள்கின்றன.

4. தங்களுக்கிடையே மிகவும் நவீன முறைகளை கையாண்டு தகவல் பரிமாற்றங்கள் செய்கின்றன.

5. சீரான பொதுச் சந்தைகள் நடத்தி, பண்டமாற்றும் செய்து வருகின்றன.

6. வெய்யில் காலத்திலேயே மழைகாலத்திற்குரிய நீண்ட நாள் தேவைக்கான தானிய மணிகளை சேமித்து வைக்கின்றன.

7. தானிய மணிகள் முளைவிட்டு வளரும் போது அவற்றின் அடிவேர்களை அறுத்துவிடுகின்றன. அவ்வாறு அறுக்காது விட்டுவிடின் அவை அழுகிப்போகும் என்பதைத் தெரிந்து வைத்துள்ளன.

8. சேமித்து வைத்திருக்கும் தானியக்களஞ்சியம் மாரிகாலத்தில் ஈரப்பசைமிக்கதாய் மாறிவிடும்போது, அவற்றை வெளியே கொண்டு வந்து சூரிய கதிர் ஒளியில் காயவைக்கின்றன. அந்த தானிய மணிகள் சூரிய ஒளியில் காய்ந்ததும் உடனே உள்ளே கொண்டு சென்று பாதுகாக்கின்றன. ஈரப்பசையால் வேர்விட்டு அழுகிப்போய்விடும் என்ற வேளாண்மை அறிவைப் பெற்றிருப்பது விந்தையிலும் விந்தையல்லவா?

இறைவனின் அருள் வேதம் கூறிய அனைத்தும் இன்று உண்மையாகிவருவது';குர்ஆன் அல்லாஹ்வின் வேதம்'என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகளாகும்.

அறியுடையோர் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
சிந்தித்துப்பார்கும் மக்களுக்கு அரிய படிப்பனை உள்ளது
(குர்ஆன் 13:3,16:11 , 39:42,45:13)

நன்றி : மீரான்

Wednesday, February 20, 2008

Boycott -Made in Denmark Products


Dear All,


At least 17 Denmark news papers have insulted prophet again (Gulf news dated 14th Feb. 08). Can we use our freedom of ex-pression to announce to at least 10 persons that we love prophet (PBUH) more than our lives?


Are we going to die if we do not use product’s benefiting such people?


Emkay Group, which manages lulu chain of super markets, Carrefour and Dubai co operative Society already discussed to remove the products from it shelves. Drops of water make an ocean. You can make a difference!

Lets ACT against such evil firmly with all our heart and efforts.


Can we pass this to 10 other people?

Sunday, February 17, 2008

கட்டாய திருமணம் இஸ்லாத்துக்கு எதிரானது


கட்டாய திருமணம் இஸ்லாத்துக்கு எதிரானது : டில்லி கூட்டத்தில் முஸ்லிம் வல்லுநர்கள் கருத்து


புதுடில்லி: ஒரு பெண்ணுக்கு அவள் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி திருமணம் செய்வது இஸ்லாம் சட்டத்துக்கு எதிரானது, என முஸ்லிம்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. டில்லியில் பல்வேறு இஸ்லாம் அமைப்புகளின் தலைவர்கள் கூடி பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். "முஸ்லிம் பெண்ணுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பது இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது. மணபெண்ணுக்கு பிடிக்காத மணமகனை திருமணம் செய்து வைப்பது அநீதியானது. பெற்றோர் மற்றும் உறவினரால் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டால் அந்த திருமணத்தை செல்லாது, என அப்பெண் அறிவிக்கலாம்; பிடிக்காத மணமகனை திருமண நிகழ்ச்சியின் போதே புறக்கணிக்கலாம், அல்லது திருமணம் முடிந்த பிறகு அந்த மணமகனை நிராகரிக்க பெண்ணுக்கு உரிமை உண்டு; கணவனை தன்னிச்சையாக தேர்வு செய்யும் உரிமை பெண்ணுக்கு உண்டு' என டில்லியில் நடந்த இஸ்லாமிய வல்லுனர்களின் கூட்டத்தில் ஒரு மனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Tanks : dinamalar

மனிதாபிமானத்துடன் இவருக்காக ஒரு 10 நிடங்களை ஒதுக்கி உதவுங்கள்




Dear Kind Hearts!



When I visited an Old Age Home in Riyadh, last Saturday, I was told that a man seems to be an Indian is there for last eight years and his identity is unknown. When I saw the man I was shocked. Yes. For last eight years! He should be in his mid forties, now. My imagination went wild for a moment. I could understand by his look that he is an Indian and, that too, he should be from southern part of India. When I enquired the authorities they were very helpful in providing




available details about him:





· He was a victim of HIT AND RUN on Dirab Road on (24.03.1421H) today is 9/2/1429H , means in 1999 and lost his consciousness.





· He was admitted to Shumaisi Hospital.





· Since he had no Iqama(Residential permit) or any other things that could prove his identity, he was transferred to prison after treatment.





· Even in prison, neither his sponsor nor any of his colleagues had come to see him. · So he was transferred to old age home.





· The authorities at the Old Age Home had taken umpteen efforts and forwarded his case to different Embassies, too. But all in vain.





Now he is healthy. He can see, walk, eat but he cannot speak. His memory power is lost. He responds to few verbal commands. His appearance, vaccination mark on his hand and his name (Philisbar Mohen : This was how he was being called when he was in hospital. This is mentioned in Arabic in his case file) all these gave me a strong impression that HE IS AN INDIAN. I have posted his recent photo image and two file photos for your reference.





I am posting this message with lot of hopes and prayers that some one of you might know him or might help him by spreading this message.





Dear kind hearts! Welfare and charity clubs! Any one of you could light his life. Imagine a family without it's head, a mother lost his son and a wife delinked from her mate! Media is a great gift of God. Just a click! That could change his life! That could bring smile on so many faces! Imagine, you were the link for the happiness of the family when their lost son- husband- above all a father is reunited!