கட்டாய திருமணம் இஸ்லாத்துக்கு எதிரானது : டில்லி கூட்டத்தில் முஸ்லிம் வல்லுநர்கள் கருத்து
புதுடில்லி: ஒரு பெண்ணுக்கு அவள் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி திருமணம் செய்வது இஸ்லாம் சட்டத்துக்கு எதிரானது, என முஸ்லிம்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. டில்லியில் பல்வேறு இஸ்லாம் அமைப்புகளின் தலைவர்கள் கூடி பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். "முஸ்லிம் பெண்ணுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பது இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது. மணபெண்ணுக்கு பிடிக்காத மணமகனை திருமணம் செய்து வைப்பது அநீதியானது. பெற்றோர் மற்றும் உறவினரால் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டால் அந்த திருமணத்தை செல்லாது, என அப்பெண் அறிவிக்கலாம்; பிடிக்காத மணமகனை திருமண நிகழ்ச்சியின் போதே புறக்கணிக்கலாம், அல்லது திருமணம் முடிந்த பிறகு அந்த மணமகனை நிராகரிக்க பெண்ணுக்கு உரிமை உண்டு; கணவனை தன்னிச்சையாக தேர்வு செய்யும் உரிமை பெண்ணுக்கு உண்டு' என டில்லியில் நடந்த இஸ்லாமிய வல்லுனர்களின் கூட்டத்தில் ஒரு மனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tanks : dinamalar
1 comment:
Every human being is having personal liberty to choose their life partner.Islam gives liberty to women and protects their rights from evil culture. They were the model to the life-living. No one is having right to take deceision against her will. The Islamic Laws and the Indian Laws permits them to choose their life partner.
From,
Mustafa J. Tamil Selvan M.A.,M.L.,
Advocate, Puthoor, Mondaikadu Post, Kanyakumari - 629252, Tamil Nadu, INDIA, Cell: 9487187193
Post a Comment